search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென் போக்ஸ்"

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த சாம் பில்லிங்ஸ் காயம் அடைந்ததால், அவருக்குப் பதிலாக பென் போக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    உலகக்கோப்பைக்கு முன் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்திருந்தார். இவருக்கு கவுன்ட்டி கிரிக்கெட்டின்போது காயம் ஏற்பட்டது. இதனால் பென் போக்ஸ் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


    சாம் பில்லிங்ஸ்

    பென் போக்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். அந்தத் தொடரில் சதம் அடித்து அசத்தினார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவதால் இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.
    இலங்கைக்கு எதிரான பல்லேகெலே டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோவ் 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு திரும்பினால், பென் போக்ஸிற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பேர்ஸ்டோவ் நாளை பல்லேகெலேயில் தொடங்கும் 2-வது போட்டியில் களம் இறங்கமாட்டார் என்றும், பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மொயீன் அலி 3-வது வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த வகையில் அவர் விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோ பட்லரை 3-வது வீரராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஜோ பட்லர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் போக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அறிமுக வீரர் பென் போக்ஸின் (107) அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலி (4), ஜேக் லீச் (2) ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 203 ரன்னில் சுருண்டது.

    139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, தொடக்க வீரர் ஜென்னிங்ஸின் (146 நாட்அவுட்) அபார சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக 461 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இலங்கை அணிக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து.


    ஜேக் லீச்

    காலே டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் 462 ரன்கள் என்பது சாத்தியமே அல்ல என்ற போதிலும், சொந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கை களம் இறங்கியது. 2-வது இன்னிங்சிலும் மொயீன் அலி சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 250 ரன்களில் சரணடைந்தது.


    அப்பீல் கேட்கும் இங்கிலாந்து வீரர்கள்

    இதனால் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி நான்கு விக்கெட்டுக்களும், லீச் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் 37 ரன்கள் சேர்த்த பென் போக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் கண்டியில் 14-ந்தேதி தொடங்குகிறது.
    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனையடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயீன் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதத்தை கடந்தார்.

    முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் (46 ரன்), சாம் குர்ரான் (48 ரன்), ஜோஸ் பட்லர் (38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்திச் சென்றார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜேக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது ஆள் நாட்டம் தொடங்கியது. ஜோ லீச் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் உடன் தில்ருவான் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    மறுமுனையில் விளையாடிய பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    ×